போஸ்ட் மேட்ச் ஸ்பீச் தோனி | Post Match Speech by Dhoni

போஸ்ட் மேட்ச் ஸ்பீச் தோனி: மேட்ச் முடிஞ்சதும் தோனி பேசுறது ஒரு மேஜிக் தான்
சமீபத்துல டாக்டர் படம் தியேட்டர் ல பார்த்துட்டு …க்ளைமேக்ஸ் முடிஞ்சு எல்லாம் எந்திரிச்சு போகும் போது செல்லம்மா பாட்ட போட்டு விட்டு எல்லாரையும் இருக்கை ல இருப்பு கொள்ள வச்சானுங்க.
அது மாதிரியான ஒரு மேஜிக் தான் மேட்ச் முடிஞ்சதும் தோனி பேசுறத பார்க்குறதும். அதுக்காக வே கூடுதலா காத்திருக்கலாம். போஸ்ட் மேட்ச் ஸ்பீச் அப்போ ஹர்ஷா போக்லே கேட்குறாப்ள.
“நீங்க சென்னைக்காக விட்டுட்டு போற LEGACY பத்தி என்ன நினைக்குறீங்க” னு?
போஸ்ட் மேட்ச் ஸ்பீச் தோனி: டக்குனு தோனி “நான் விட்டுட்டு லாம் போல யே” னு சொல்லிட்டு ஒரு சிரிப்பு சிரிச்சான் பாருங்க. அது தான் சார் தோனி
இந்த வெற்றி ல ருத்துராஜ்,டூப்ளஸி,ராபின்,ஜடேஜா,மொயீன் னு ஏகப்பட்ட ஆட்களோட உழைப்பு இருக்கு. எல்லாமே கொண்டாட்டத்துக்கு உரியது தான். ஆனா எங்க கேப்டன் இஸ் சம் வாட் ஸ்பெஷல் ஃபார் Us! தன்னோட Process மேல முழுசா நம்பிக்கை வச்சு Potential ஆன ஆள் னு தான் நம்புற ஒருத்தன எந்த சூழல் லயும் விட்டுக்கொடுக்காம வாய்ப்பு கொடுத்து அவனோட வெற்றியயும் அணியோட வெற்றி யயும் ஒரு சேர உறுதி செய்றதுலாம் தனி கலை.
ஒரு காலத்துல டக் மேன்,டூ மினிட்ஸ் மேகி னுலாம் கிண்டல் பண்ணப்பட்ட ரோஹித் த முழுசா நம்புன அதே தோனி தான் இன்னைக்கு ருத்துராஜ யும் கிரிக்கெட் உலகத்துக்கு அறிமுகப்படுத்திட்டு போய்ருக்கான்…வயசானவைங்களோட கூட்டமைப்பு னு விமர்சிக்கப்பட்ட டீம வச்சே இரண்டு ஐ.பி.எல் கப்ப தூக்கிட்டு வந்துருக்கான்.
குடும்பத்துடன் ஆனந்த கண்ணீர்விட்ட தோனி
அங்க மேட்ச் முடிஞ்சு மனைவி மக்களோட அவனுக நின்னு ஃபோட்டோஸ் எடுத்துட்டு இருக்கத பார்க்குறப்போ நமக்கே பொறாமை யா இருக்கும் அந்தளவு டீம் க்குள்ள ஒரு அழகான பிணைப்பு இருக்கு. தோனி யோட கேரியர் ல முத்தாய்ப்பான ஒரு முடிவா இது இருக்கும். இதுக்கு மேல ஒரு சிறந்த வழியனுப்பல் இருக்காது.
Farewell match Chennai ல நடந்தா நல்லாருக்கும்… அது மட்டும் ஒரு நப்பாசை…
என் ஆட்டம் இன்னும் முடியல : தோனி அதிரடி
தோனி… தோனி… தோனி… தோனி…
அன்புடன் அப்பாஸி | Fan of Dhoni
